
டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள்
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
ராமாயண காவியத்தை, திரைப்பட வடிவில் எடுத்துள்ளார் பாலிவுட் இயக்குனர் ஓம் ராவுத்.
'பாகுபலி' படத்திற்கு பிறகு ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் பிரபாஸ், இந்த படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார்.
இவருடன் நடிகை க்ரிதி சானொன், சைப் அலி கான் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது.
இந்தியா முழுவதிலும், புக்கிங் துவங்கிய சில மணிநேரத்திலேயே மளமளவென டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில்.
அதிலும், டெல்லியில் உள்ள PVR திரையரங்குகளில், இந்த படத்திற்கான டிக்கெட் விலை ரூ.2,200 என நிர்ணையிக்கப்பட்டிருந்தது எனவும், அதுவும் விற்று போனது எனவும் கூறுகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
ரூ.2,000 க்கு மேல் விற்கப்பட்ட டிக்கெட்டுகள்
#Adipurush Tickets sold out At #Delhi For Rs 2000. Here's How Much you Need To Pay In #Mumbai, #Kolkata, #Bangalore.https://t.co/q40m9UENry pic.twitter.com/gGeiS2h57g
— TIMES NOW (@TimesNow) June 13, 2023