Page Loader
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான யாஷிகா ஆனந்த்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்ற மாதம், யாஷிகா அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில், அவருக்கு சம்மன் பிறப்பித்த நீதிமன்றம், அடுத்த விசாரணைக்கும் யாஷிகா வரவில்லையென்றால், அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. உடனே, அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆனார் யாஷிகா. அதை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றதாகவும், அதற்காக யாஷிகா தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனினும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 27ம் தேதி நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

card 2

விபத்தில் மரணம் அடைந்த யாஷிகாவின் தோழி

சம்பவம் நடந்த அன்று இரவு பார்ட்டி முடித்துவிட்டு, நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன், காரில் பயணம் செய்த போது, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில், கார் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீட் பெல்ட் அணியாத காரணத்தால், அவர் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, வெளியே வந்து விழுந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதோடு, காரில் உடன் பயணித்த மேலும் இரு நபர்களும், யாஷிகாவிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின் போது, காரை ஓடியது யாஷிகா என்பதால், அவரின் மேல் வழக்கு பதியப்பட்டுள்ளது.