Page Loader
யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்
யாஷிகா செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆனார்

யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
01:52 pm

செய்தி முன்னோட்டம்

இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், சென்ற வாரம், யாஷிகா அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. இதனால் சம்மன் பிறப்பித்த நீதிமன்றம், அடுத்த விசாரணைக்கும் யாஷிகா வரவில்லை என்றால், அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து, இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட யாஷிகா நேரில் ஆஜரானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாஷிகா ஏற்படுத்திய அந்த விபத்தில், அவரது தோழி வள்ளி செட்டி என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

யாஷிகா வழக்கு