LOADING...
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த குட் நியூஸ்.. கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா!
கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த குட் நியூஸ்.. கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
08:12 am

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு கர்ப்பமாக இருப்பதாகக் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த யூகங்களுக்கு அவரே தற்பொழுது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது புதிய திரைப்படத்தின் வெற்றி விழாவில், தான் கர்ப்பமாக இருப்பதை நெகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்தியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

அறிவிப்பு

மேடையில் சமந்தா வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிவிப்பு

ஹைதராபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் தேங்க் யூ மீட் விழாவில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், "சாரி பிரண்ட்ஸ், சினிமா உலகில் இருந்து மீண்டும் ஒரு சிறிய இடைவெளி. அதன் பிறகு நான் நிச்சயம் வலுவாகத் திரும்பி வருவேன். நான் இப்போது பிரசவ கால விடுமுறை எடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று உருக்கமாகத் தெரிவித்தார். இதன் மூலம் தான் தாயாகப் போகும் செய்தியை அவர் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார்.

வாழ்த்து

இயக்குநர் நந்தினி ரெட்டியின் வாழ்த்து

முன்னதாக, இந்தத் திரைப்படத்தின் இயக்குநரான பி.வி.நந்தினி ரெட்டி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சமந்தாவின் கர்ப்பத்தை மறைமுகமாக உறுதிப்படுத்தியிருந்தார். "எங்களது மா இண்டி பங்காரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்த அழகான தருணத்தில், சமந்தாவின் வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சியான செய்தி வந்திருப்பது இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்துள்ளது." என்று அவர் வாழ்த்தியிருந்தார்.

Advertisement

திருமணம்

கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் நடந்த ரகசிய திருமணம்

பிரபல தி பேமிலி மேன் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸை உருவாக்கிய முன்னணி இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தின் லிங்க பைரவி கோவிலில் மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இந்தத் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை டிசம்பர் 2026க்குள் எதிர்பார்ப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பாக்ஸ் ஆபீஸ் வசூல்

பாக்ஸ் ஆபீஸில் மிரட்டும் மா இண்டி பங்காரம்

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அவரே தயாரித்துள்ள மா இண்டி பங்காரம் (தமிழில் 'எங்கள் தங்கம்') திரைப்படம் கடந்த ஜூன் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஒரு பாரம்பரியக் குடும்பத்திற்குள் மருமகளாக வரும் பெண்ணின் கடந்த கால ரகசியப் பின்னணியை மையமாகக் கொண்ட இந்த அதிரடித் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவில் ₹33 கோடிக்கும் அதிகமாகவும், உலக அளவில் ₹55 கோடிக்கும் மேலாகவும் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது.

Advertisement