Page Loader
"எனக்கு ஹோம்லி வேடங்களே தருகிறார்கள்": நடிகை பூமிகா வருத்தம்
நடிகை பூமிகா, தான் நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார்

"எனக்கு ஹோம்லி வேடங்களே தருகிறார்கள்": நடிகை பூமிகா வருத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2023
11:07 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் போன்ற படங்களில் ஹோம்லியான ஹீரோயினாக நடித்து, தமிழ் ரசிகன் மனதில் இடம் பிடித்தவர், நடிகை பூமிகா. தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் போன்றவர்களுடனும் நடித்துள்ளார். 'குஷி' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில், ஜோதிகாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அதேபோல, ஹிந்தியிலும் பல படங்களில் நடித்தார். குறிப்பாக, 'சேது' படத்தை, ஹிந்தியில் 'தேரே நாம்' என்ற பெயரில் எடுத்தனர். 'சீயான்' விக்ரம் கதாபாத்திரத்தில், சல்மான் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தார் பூமிகா. பின்னர், திருமணம் ஆகி செட்டில் ஆனவர், அவ்வப்போது சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றுவதுண்டு. தற்போது, மீண்டும் அவர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி உள்ள ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

card 2

"காமெடி வேடங்களில் நடிக்க ஆசை"

பல ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில், பூமிகா நடிப்பதால், இது அவரின் கம்பேக் படமாக கருதுகிறார்கள் அவரின் ரசிகர்கள். அந்த படத்தின் ப்ரோமோஷனின் போது, பல மொழிகளில் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பூமிகா, "நான் பல நல்ல படங்களில், திறமையான இயக்குனர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இருப்பினும், எனக்கு எப்போதும் ஒரே மாதிரியான ஹோம்லி கதாபாத்திரங்களே தருகிறார்கள். ஒரு நடிகையாக, காமெடி, திரில்லர் என பலவித கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை" என அவர் கூறியுள்ளார். பூமிகாவின் ஆசைக்காகவும், அவரின் ரசிகர்களுக்காகவும், அவரை விரைவில், வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைக்க ஏதேனும் இயக்குனர் முயற்சிக்கலாம்!