D50: தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அபர்ணா பாலமுரளி
'சூரரை போற்று' படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படத்திற்கு பிறகு 'ஜெய் பீம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். நல்ல கதைக்காக காத்திருப்பதாக கூறிய அபர்ணா, தற்போது தனுஷ் இயக்கப்போகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'D50 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், SJ சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுள், சந்தீப்பிற்கு ஜோடியாக அபர்ணா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போது, தனுஷின் 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்காக சென்னை ECR ரோட்டில் செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.