Page Loader
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்
சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2025
10:01 am

செய்தி முன்னோட்டம்

நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் (ரவி மோகன்) இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ஜெயம் ரவி, 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இருந்த போது தான் முதல்முறையாக சபரிமலைக்கு சென்றதாக கூறப்பட்டது. அப்போது கன்னிசாமியாக அவர் ஜெயராமுடன் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்துவரும் ஜெயம் ரவி, இந்த முறை கார்த்தியை உடன் அழைத்து சென்றுள்ளார். இது கார்த்திக்கு முதல்முறை என கூறப்படுகிறது. 'சர்தார் 2' படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் கார்த்தி, தொடர்ந்து 'வா வாத்தியார்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post