
நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷ்ணு விஷால் இன்று தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.
இது இந்த தம்பதியினரின் முதல் குழந்தை என்றும், அவர்களின் நான்காவது திருமண ஆண்டு விழாவின் போது குழந்தை பிறந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
விஷ்ணு விஷால் இந்த மகிழ்ச்சியான செய்தியுடன் இரண்டு படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் ஒன்றில் அவரது மகன் ஆர்யன் மருத்துவமனையில் தனது தங்கையை ரசிப்பது போல இருப்பது, நெகிழ வைக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Clicks | நடிகர் விஷ்ணு விஷாலுக்கு 2வது குழந்தை பிறந்தது!#SunNews | #BabyGirl | #VishnuVishal | @TheVishnuVishal pic.twitter.com/jJrBBwLO8q
— Sun News (@sunnewstamil) April 22, 2025
விவரங்கள்
இது விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமணம்
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் காதலித்த பின்னர், விஷ்ணு விஷாலும், ஜ்வாலா கட்டாவும் ஏப்ரல் 22, 2021 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, விஷ்ணு விஷாலுக்கு ரஜினி நட்ராஜுடனான முதல் திருமணத்தில் ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.
சினிமாவில், விஷ்ணு விஷால் கடைசியாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தில் அவர் ரஜினிகாந்த், விக்ராந்த், செந்தில் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலருடன் இணைந்து நடித்தார்.
தற்போது அவர் 'இரண்டு வானம்', 'மோகன்தாஸ்' மற்றும் 'ஆர்யன்' ஆகிய படங்களின் படப்பிடிப்பில் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளார்