Page Loader
மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்
மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்

மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்

எழுதியவர் Nivetha P
Sep 30, 2023
12:49 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஷால் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி பதிப்பினை திரையிட மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக விஷால் ஓர் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து மத்தியத்தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திரைப்படங்களின் தணிக்கையில் வெளிப்படைத்தன்மையினை கடைபிடிக்கவே இ-சினிபிரமான் என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்களை அணுகுகிறார்கள். இவ்வாறு தணிக்கை வாரியத்தின் பெயரில் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது. அதேபோல் விஷாலின் புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி 

பிரதமர் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில முதல்வருக்கு நன்றி கூறிய விஷால் 

இதுகுறித்து விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒருபகுதியாக செயல்படும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு"என்றும், "ஊழலின் படிகள் அல்ல. தேசத்திற்கு சேவைச்செய்வதற்காக நேர்மையான பாதையில் பயணிக்கவும் இது ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்புகிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, "ஊழலால் பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது எனக்குள் எழுந்துள்ளது" என்றும் கூறியுள்ளார். மேலும், "எனது பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த உடனடி நடவடிக்கைக்கு காரணமாக அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்"என்றும் அவர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.