
நடிகர் விஷால் அளித்த புகாரின் எதிரொலி - வழக்குப்பதிவு செய்த சிபிஐ
செய்தி முன்னோட்டம்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
இப்படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இப்படத்தினை இந்தியில் வெளியிட விஷால் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அப்போது இப்படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டு ரூ.6.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் புகாரளித்திருந்தார்.
அதன்படி அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு பதிலளித்து பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தது.
அதற்கு நடிகர் விஷால் தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால் அளித்த புகாரின்படி 1 பெண் உள்ளிட்ட 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வழக்குப்பதிவு
#BREAKING | நடிகர் விஷால் புகார் - 3 பேர் மீது வழக்கு
மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால்
எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக
3 பேர் மீது வழக்குப்பதிவு
2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு#MarkAntony | #vishal |… pic.twitter.com/JvqewISzB4 — Thanthi TV (@ThanthiTV) October 5, 2023