விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது தயாரிப்பு நிறுவனம். இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை குறித்த அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.