
தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' எனும் பீரியட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தாய்லாந்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நடிகர்கள் சூர்யா உள்ளிட்டோர் நேற்றே தாய்லாந்து சென்று விட்டனர்.
தாய்லாந்தில் இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பு தொடரும் எனவும், அடர்ந்த காடுகளுக்குள் பீரியட் காட்சிகளை படமாக படக்குழு திட்டமிட்டுள்ளது.
கங்குவா படப்பிடிப்பு முடிந்தபின், நவம்பர் மாதம் முதல் சூர்யா, சுதா கொங்கரா இயங்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இறுதிக்கட்டத்தில் கங்குவா படப்பிடிப்பு
Suriya’s #Kanguva last schedule shoot begins today in Thailand. pic.twitter.com/bBq6Tv0l8F
— Venkatramanan (@VenkatRamanan_) October 5, 2023