Loading...
சூர்யாவின் சீன் பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு: முழு விவரம் இதோ
சூர்யாவின் சீன் பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் விவரம்

சூர்யாவின் சீன் பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு: முழு விவரம் இதோ

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
08:14 pm

செய்தி முன்னோட்டம்

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தீபாவளி பண்டிகைக்குத் திரைக்கு வந்த 'சீன்' திரைப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்துடன் கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான போதிலும், 'சீன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் இப்படம் உலகளவில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சம்பளம்

சூர்யா, நஸ்ரியா, ஜித்து மாதவன் சம்பளம்

சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சூர்யா - ஜோதிகா தம்பதியினரின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதையின் நாயகனாக நடித்த சூர்யாவுக்கு சம்பளமாக 15 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நஸ்ரியா நசீமுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அதேபோல், மலையாளத்தில் தொடர் வெற்றிகளைத் தந்துவிட்டு இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜித்து மாதவனுக்கும் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திரங்கள்

துணை நடிகர்களின் அதிகாரப்பூர்வ சம்பள விவரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாகக் காலடி எடுத்து வைத்துள்ள இளம் மலையாள நட்சத்திரம் நஸ்லனுக்கு சுமார் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் தந்தையாக கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்திய மூத்த நடிகர் ஆனந்த்ராஜுக்கு 80 லட்சம் ரூபாயும், முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் லாலுக்கு 60 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் காமெடி ரீல்ஸ்கள் மூலம் புகழ்பெற்று இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள 'லுங்கி பாய்ஸ்' ராஜ் பிரியனுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT