LOADING...
'வேட்டுவம்' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞருக்கு நடிகர் சிம்பு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி 
உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞருக்கு நடிகர் சிம்பு நிதியுதவி

'வேட்டுவம்' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞருக்கு நடிகர் சிம்பு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2025
03:42 pm

செய்தி முன்னோட்டம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு இடத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தார். இதையடுத்து, நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார். 'வேட்டுவம்' திரைப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பின் போது, ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ், மாரடைப்பால் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. எனினும், படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு

படப்பிடிப்பு தளத்தில் மோகன் ராஜ் உயிரிழந்ததையடுத்து பா.ரஞ்சித் மீது வழக்கு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் படப்பிடிப்பில் இந்த விபத்து நடந்ததால், பா. ரஞ்சித் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த படமான 'தங்கலான்' பாக்ஸ்ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது 'வேட்டுவம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், இந்தச் சோகச் சம்பவம் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மோகன் ராஜின் மறைவிற்கு, சிலம்பரசன் நிதியுதவி வழங்கிய செய்தி நெகிழ்வை ஏற்படுத்திய அதே நேரத்தில், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்து திரையுலகத்தில் புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது