Page Loader
'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்
'வேட்டுவன்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் இறந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2025
04:54 pm

செய்தி முன்னோட்டம்

இரு தினங்களுக்கு முன்னர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் இறந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரிஸ்க்கான சண்டை காட்சியில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக இயக்குனர் மற்றும் மூன்று பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செவ்வாயன்று, இந்த துயர சம்பவம் குறித்து தனது குழுவினரின் சார்பாக இயக்குனர் ஒரு அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார். மேலும் மோகன் ராஜின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை

இந்த 'வேட்டுவம்' படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதனால் இன்று படத்தயாரிப்புப் பிரிவு சார்பாக அறிக்கை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. "

அஞ்சலி

மோகன் ராஜிற்கு அஞ்சலி 

இந்த மரண சம்பவம் ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இது திரைப்படத் துறையில் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பரவலான கவலையைத் தூண்டியுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதும் மோகன் ராஜ் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அனால் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதாரங்களின் அடிப்படையில், படக்குழுவினர் மீது போலீசார் இப்போது வழக்கைத் திருத்தியுள்ளனர். BNS சட்டத்தின் பிரிவுகள் 289 (அலட்சியமாக நடந்துகொள்வது), 125 (குற்றத்தைத் தூண்டுதல்) மற்றும் 106(1) (கொலைக்கு சமமானதல்ல) ஆகியவற்றின் கீழ் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் மூவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.