அதிதி ராவ் உடன் தனது திருமணம் எப்போது? நடிகர் சித்தார்த் கூறிய பதில்
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. மீடியாவில் விஷயம் வெளியாகாதவாறு இருவரும் இதுகுறித்து ரகசியம் காத்து வந்தது, கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் கலாட்டா மீடியா நடத்திய ஒரு விருது விழாவில், 'சித்தா' திரைப்படத்திற்காக விருது வென்ற சித்தார்த் இந்த நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், "இதை நாங்கள் ரகசியமாக செய்தோம் என்று பலர் கூறுகிறார்கள். குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் நடைபெறுவதற்கு, ரகசியமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் அழைக்காதவர்கள் இதை ரகசியம் என்று அழைக்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தினரை பொறுத்தவரை இது ஒரு பிரைவேட் ஈவென்ட்" என்றார். அதோடு திருமண தேதி பற்றி பெரியவர்கள் கூறும்போது நடைபெறும் என்றார்.
திருமணம் எப்போது?
When did @aditiraohydari say yes? #Siddharth opens up for the first time ♥️🫂#Siddharth #AditiRaoHydari #GalattaGoldenStars2024 pic.twitter.com/SiSGvTfdWT— Galatta Media (@galattadotcom) April 6, 2024