சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி: திருமணம் இல்லை..நிச்சயதார்த்தம் தான் நடைபெற்றது
பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் நேற்று திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர்கள் இருவரும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், நடந்தது திருமணமல்ல, இருவரின் திருமண நிச்சயதார்த்தம்! இருவரும் கைகளில் மோதிரத்தை அணிந்த ஒரு புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, 'E.N.G.A.G.E.D.' என குறிப்பிட்டிருந்தனர். எனினும், நேற்று வெளியான செய்திப்படி, தெலங்கானா வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரெங்கபுர ரங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் தான் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நடிகை அதிதி ராவின் தாய் வழி பாட்டனார், வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி ராஜா. அதனால் அங்கே இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தம்!
#Siddharth & #AditiRaoHydari Are Now Officially Engaged ❤️💍 Best Wishes For Both 💕 pic.twitter.com/y7j5Wx9YH2— Kolly Corner (@kollycorner) March 28, 2024