
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்?
செய்தி முன்னோட்டம்
பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் இன்று காலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதன்படி, இவர்களது திருமணம் தெலங்கானா வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரெங்கபுர ரங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். எனினும் நெருங்கிய சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும், கடந்த 2021இல் வெளியான மஹாசமுத்திரம் திரைப்படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர்.
இருவரும் இது குறித்து வெளியில் தெரிவிக்காதிருந்த போதும், பல பொது இடங்களிலும், விழா நிகழ்ச்சிகளும் சேர்ந்தே காணப்பட்டனர்.
அதோடு இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதரில் இருந்து, தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரிவிற்கு திருமணம்?
Buzz: Reports are coming in that #siddharth got married with #AditiRaoHydari at Vanaparthi Srirangapur Ranganathaswamy Temple. pic.twitter.com/WIXsvKnhqJ
— Deccan Delight (@DeccanDelight) March 27, 2024