காவிரி விவகாரம்- சித்தா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்
செய்தி முன்னோட்டம்
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை பூதாகரமாகியுள்ள சூழ்நிலையில், தனது சித்தா படத்தின் ப்ரமோஷன் இல் பங்கேற்று இருந்த நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேற்றப்பட்டார்.
நடிகர் சித்தார்த் நடித்துள்ள சித்தா(கன்னடத்தில் சிக்கு) திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக நேற்று (செப்டம்பர் 28ஆம்) பெங்களூரில் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்த பொழுதே அந்த அரங்கத்துக்குள் நுழைந்த சில கன்னட அமைப்பினர் தமிழ் படத்திற்கு இங்கு ப்ரோமோஷன் நடக்கக்கூடாது எனவும், படத்தின் பேனர்களை அப்புறப்படுத்தும்படியும் கூச்சலிட்டனர்.
அவர்களிடம் நடிகர் சித்தார்த் சமரசம் முயன்ற போது, கன்னட அமைப்பினர் நடிகர் சித்தார்த் அந்த அரங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கோஷமிட்டனர்.
ஒரு கட்டத்தில் பதற்றம் அதிகரிக்கவே நடிகர் சித்தார்த் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சித்தார்த் தொந்தரவு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டித்துள்ளார்
#BREAKING | சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது - நடிகர் பிரகாஷ் ராஜ் #PrakashRaj | #ActorSiddharth | #Kannada | #Chikku | #CauveryWater | #CauveryIssue pic.twitter.com/XrcpA8uCP1
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 28, 2023