NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம்
    அமீருக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிட்ட சசிக்குமார்.

    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம்

    எழுதியவர் Srinath r
    Nov 29, 2023
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குனர் அமீருடன் ஏற்பட்ட மோதலுக்கு, அறிக்கை வாயிலாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அதை "போலியான வருத்தம்" என சசிகுமார் கண்டித்துள்ளார்.

    இது குறித்து நடிகர் சசிக்குமார், "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அமீர், ஞானவேல் ராஜா மீது சுமத்திய 'பொய்யான குற்றச்சாட்டுகள்' என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது அறிக்கையில், "அமீர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதால், சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதாக" கூறியிருந்த நிலையில், அதை தன் அறிக்கையில் சசிகுமார் சுட்டிக்காட்டி உள்ளார்.

    2nd card

    "பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?"- சசிக்குமார்

    மேலும், ஞானவேல் ராஜா அவரது அறிக்கையில், "நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    சசிக்குமார் அவரது அறிக்கையில், 'அந்த வார்த்தைகள் என்ன' என வினவியுள்ளார்.

    மேலும், ஞானவேல் ராஜா திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு, அதற்கு அவரே வருந்துவது எந்த மாதிரி வருத்தம் என கேட்டுள்ளார்.

    இந்த அறிக்கை மூலம் ஞானவேல் ராஜா, அமீர் அண்ணனுக்கு சொல்வது என்ன என்றும், ஞானவேல் ராஜாவின் பேரிடப்படாத அறிக்கை யாருக்கு எழுதப்பட்டது எனவும் சசிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    3rd card

    அமீருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் சசிகுமார்

    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் வழங்கிய நேர்காணலில், அமீரை வேலை தெரியாதவர் எனவும், திருடர் எனவும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த சசிகுமார், பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்புக்கு, அமீருக்கு தான் பணம் வழங்கி உதவியதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தனது பேச்சுக்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்ததால், இந்த சர்ச்சை முடிந்து விட்டது என நினைத்த நிலையில், சசிக்குமாரின் அறிக்கை பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம்

    #Ameer #Paruthiveeran #Gnanavelraja pic.twitter.com/VuzqC8Cuvq

    — M.Sasikumar (@SasikumarDir) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமீர்
    திரைப்படம்
    நடிகர்
    தயாரிப்பாளர்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்

    திரைப்படம்

    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு ட்விட்டர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய் சேதுபதி

    நடிகர்

    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  கௌதம் வாசுதேவ் மேனன்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    கணவர் அசோக் செல்வனுக்கு ஸ்வீட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி பாண்டியன்  பிறந்தநாள்
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்

    தயாரிப்பாளர்

    சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை கோலிவுட்
    நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு  நடிகர் அஜித்
    பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு கோலிவுட்
    அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025