நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மதியம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர் சரத்பாபு மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து உள்ளார். இருவரும் இணைந்து, முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "நான் நடிகனாகுவதற்கு முன்பே எனக்கு சரத்பாபுவை தெரியும். அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.