Page Loader
பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார் 
நடிகர் சரத்பாபு காலமானார்

பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார் 

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் பழம்பெரும் நடிகர் பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. சமீபத்தில், செப்சிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கபட்டிருந்த சரத்பாபு, பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், அவர் குடும்பத்தார் அவரை ஹைராபதிற்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இருப்பினும், பல்உறுப்பு செயல்பாடுகளை இழந்த சரத் பாபு, செயற்கை சுவாசத்தின் உதவியுடன் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். எனினும், சிகிச்சை பலனின்றி, இன்று மதியம் காலமானார். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சரத்பாபு, நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டார். பல தமிழ் படங்களில், ஹீரோவுக்கு நண்பனாக, குறிப்பாக ரஜினிகாந்தின் நண்பனாக நடித்தவர் சரத்பாபு. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத்பாபு.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post