NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு

    ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 24, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பகுதியையும், தாங்கல் மண்டலத்தையும் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் காரணமாக, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் என் கன்வென்சன் மையம் இடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத் பேரிடர் மற்றும் சொத்துக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு (ஹைட்ரா) அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ஃபுல் டேங்க் லெவல் என்பது கட்டுமானம் தடைசெய்யப்பட்ட எந்த நீர்நிலையின் பரவலையும் குறிக்கிறது. நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளைத் தடுக்க ஃபுல் டேங்க் லெவல் பகுதியுடன் ஒரு இடையக மண்டலமும் நிறுவப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் மண்டல ஆணையர்களுக்கு, நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க ஏரி பாதுகாப்புக் குழுக்களை அமைக்கும் பணி வழங்கப்பட்டது.

    ஏரிகள்

    ஹைதராபாத்தில் ஏரிகளின் அளவு 61 சதவீதம் குறைவு

    சமீபத்தில், 1979 மற்றும் 2024க்கு இடையில் ஹைதராபாத்தில் உள்ள ஏரிகளின் அளவு 61 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் தெரிவித்துள்ளது.

    நாகார்ஜுனாவின் கன்வென்ஷன் சென்டர் ஃபுல் டேங்க் லெவல் பகுதியில் 1.12 ஏக்கர் நிலப்பரப்பிலும், கூடுதல் 2 ஏக்கர் நிலப்பரப்பிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பரப்பளவு தோராயமாக 29.24 ஏக்கர் ஆகும்.

    நாகார்ஜுனாவின் இந்த சொத்து பல ஆண்டுகளாக ஆய்வுக்கு உட்பட்டிருந்தாலும், ஹைதராபாத் மாநகநராட்சி, இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்வென்சன் மையத்தின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு நடிகரின் செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    அறிக்கை

    கன்வென்சன் மையம் இடிப்பு குறித்து நாகார்ஜுனா அறிக்கை

    இடிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "நிலம் பட்டா நிலம், ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை.

    வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், நானே இடித்திருப்பேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்று காலை இடிப்புக்கு முன்னதாக தனக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே, பேரிடர் மேலாண்மை, சொத்துப் பாதுகாப்பு மற்றும் பிற செயல்பாடுகளுக்காக சமீபத்தில் மாநில காங்கிரஸ் அரசாங்கம் ஹைட்ராவை அமைத்தது.

    பூங்காக்கள், திறந்தவெளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏரிகள் போன்ற அரசாங்க சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் பொறுப்பாகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    நாகார்ஜுனாவின் எக்ஸ் பதிவு

    Pained by the unlawful manner of demolition carried out in respect of N Convention, contrary to existing stay orders and Court cases.
    I thought it fit to issue this statement to place on record certain facts for protecting my reputation and to indicate that we have not done any…

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    நடிகர்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    நடிகர்

    ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு  பாலியல் வன்கொடுமை
    ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த்
    பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் சென்னை
    நடிகர் விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை விஜயகாந்த்

    இந்தியா

    ஓய்வெல்லாம் கிடையாது; மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகட் திட்டம் வினேஷ் போகட்
    மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன ரயில்கள்
    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து மத்திய அரசு
    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025