Page Loader
நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது
நடிகர் கார்த்தி திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது

எழுதியவர் Srinath r
Oct 18, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கார்த்தியின் நடிப்பில், இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியாகும் 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது. நடிகர் கார்த்தியின் 25 ஆவது திரைப்படமாக 'ஜப்பான்' வெளியாவது குறிப்பிடத்தக்கது. கலர் கலர் சட்டை, சுருட்டை முடி என்ன வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள கார்த்திக்கு, இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், வாகை சந்திரசேகர், எழுத்தாளர் பவா செல்லதுரை, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் 25ஆம் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் அன்று படத்தின், இன்ட்ரோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

embed

ஜப்பான் டீசர் வெளியானது

Get ready to meet the Pan India thief! Unmasking the enigmatic world of #Japan💥#JapanTeaser Telugu : https://t.co/LKT9zP95h8 Tamil : https://t.co/1DbZFhpOHo@Karthi_Offl @ItsAnuEmmanuel @vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman... pic.twitter.com/sbdleaktJK— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 18, 2023