தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு தனது நன்றிகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி, உழவன் எனும் ஒரு தொண்டு அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் மூலம், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சென்ற ஆண்டு கூட, தமிழ்நாட்டில் உள்ள சிறந்த விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 1 லட்சம் ரொக்க பரிசும் அளித்துள்ளது, இந்த அமைப்பு. தற்போதைய பட்ஜெட் தொடரில், வேளாண் சுற்றுலா ஊக்கப்படுத்த போவதாக அறிவித்ததை, அவர் பாராட்டியுள்ளார். தொடர்ந்து, விவசாய துறையில் அரசின் கவனம் பெற வேண்டிய சில விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளார்.