தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையினை இன்று(மார்ச்.,21) வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு அடையாளமான பச்சைத்துண்டினை போட்டுகொண்டு வாசித்தார். அதில், மண் குறித்து அறிந்துகொள்ள அனைத்துவிவரம் கணினி மயமாக்கம். அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிக்கப்படும். 23லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க ரூ.6,536கோடி நிதிஒதுக்கீடு. கிள்ளிகுளம் வேளாண்கல்லூரியில் வாழை ஆராய்ச்சிநிலையம் அமைக்க ரூ.15கோடி நிதிஒதுக்கீடு. காட்டுப்பன்றி,யானை போன்ற வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் தடுக்க சட்டவிதிகளுக்கு உட்பட்ட தனிக்குழு அமைக்கப்படும். நெல்லுக்கான கொள்முதல் விலை பொதுரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.75, சன்னரகத்திற்கு ரூ.100கூடுதலாக வழங்கப்படும். 25லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டஆட்சியர் அலுவலகத்திலும் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்களின் பொருட்கள் விற்பனை.
ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி செய்ய திட்டம்
கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.14ஆயிரம் கோடி வழங்கப்படும். காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.90கோடி மதிப்பீட்டில் காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகளை மேம்படுத்த திட்டம். பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலாத்திட்டத்திற்கான நிதி ரூ.1 கோடி ஒதுக்கீடு. பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொக்குப்பு விநியோகம் செய்ய ரூ.15கோடி நிதிஒதுக்கீடு. ஈரோடு கீழ்பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர்பாசனத்திற்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தித்திட்டம். விளைச்சல் குறைந்த முந்திரி மரங்களை அகற்றி உயர்விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகச்செடிகளை 500ஏக்கரில் நடவுச்செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.