Page Loader
மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா
நெல்சன் வெங்கடேசனின் திரைப்படங்கள் அவற்றின் தனித்துவமான கதைக்காக அறியப்பட்டவை.

மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா

எழுதியவர் Srinath r
Oct 11, 2023
02:30 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா 'டிஎன்ஏ' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'டாடா', 'கழுவேத்தி மூர்க்கன்' உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த எம்எல்ஏ அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவிஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஞ்ஜயன் நடிக்கிறார். 'டிஎன்ஏ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் தொடங்கிய நிலையில், அடுத்த வருடம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. க்ரைம் ஆக்சன் திரில்லராக உருவாகும் இத்திரைப்படம், அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சமீப காலமாக பெரிய வெற்றிகளில்லாமல் தவிக்கும் அதர்வா, ஒரு நாள் கூத்து, மான்ஸ்ட்ர், ஃபர்ஹானா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் உடன் இணைவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

 'டிஎன்ஏ' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பட தயாரிப்பு நிறுவனம்