LOADING...
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியீடு
ஏப்ரல் 10 அன்று நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2025
08:50 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் திட்டமிட்டப்படி இரவு 7.03 மணிக்கு வெளியிடப்படாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், ஏற்கனவே அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி படம் விடாமுயற்சி வெளியீடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் சுமார் ₹250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் நடிகர்கள்

பெரும்பாலான படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அப்டேட் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தாமதமாக வெளியானது. இதன் விளைவாக, பலர் சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி, தாமதம் குறித்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில், படத்தில் நடிகை த்ரிஷா ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும், அதுகுறித்த ஒரு சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் தீவிர அஜித் ரசிகர் என்ற நற்பெயரைக் கருத்தில் கொண்டு, படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

படக்குழு அப்டேட்