நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு, முன்னர் ஒருமுறை இருவருடனும் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இதை வெளிப்படையாகவே காட்டியுள்ளார். இந்நிலையில், மிகவும் எதிர்பார்ப்புடன் நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வெளியான தி கோட் திரைப்படத்திற்கு நடிகர் அஜித் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததற்கு அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.