
அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் புகழ் மற்றும் சந்தை மதிப்பு இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.
அதே போல, அட்லீயும், ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு பின்னர், பேன்-இந்தியா இயக்குனராக மாறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த புதிய கூட்டணியில் உருவாகவுள்ள படத்தை பற்றிய சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விவரங்கள்
படக்குழுவினரின் கூட்டணி, பட்ஜெட் மற்றும் சில விவரங்கள்
பிரபல ஹாலிவுட் VFX ஸ்டுடியோக்களின் நிபுணத்துவமும் இதில் இணைகிறது. அவர்களில் ஸ்பைடர் மேன்:ஹோம்கமிங், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், அவெஞ்சர்ஸ்:ஏஜ் ஆஃப் அல்ட்ரான் போன்ற படங்களில் பணியாற்றிய அயர்ன்ஹெட் ஸ்டுடியோவின் CEO மற்றும் கலை இயக்குநரான ஜோஸ் பெர்னாண்டஸ் மற்றும் GI ஜோ: ரிட்டாலியேஷன் மற்றும் அயர்ன் மேன்-2 போன்ற படங்களில் பணியாற்றிய VFX மேற்பார்வையாளரான ஜேம்ஸ் மடிகன் ஆகியோர் அடங்குவர்.
இப்படத்திற்காக அல்லுஅர்ஜுன் ரூ.200 கோடியும், அட்லீ ரூ.௧௦௦ கோடியும் சம்பளமாக பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் சம்பளம் எளிதாக 50 கோடியைத் தாண்டும்.
இப்படம் பெரல்லல் யுனிவெர்ஸ் கதை எனவும், படத்தின் பட்ஜெட் 500 - 600 கோடியாக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.