
உலகத்தரத்தில் தொழில்நுட்பம், மாஸாக களமிறங்கும் அட்லீ- அல்லு அர்ஜுன் திரைப்படம்; வெளியான அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இன்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படம், ஜவான் தெறி, பிகில், மெர்சல் போன்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களை வழங்கியதற்காக அறியப்பட்ட அட்லி, தேசிய விருது பெற்ற புஷ்பா நட்சத்திரமான அல்லு அர்ஜுன்; மற்றும் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் ஆகிய மூன்று வலிமையான படைப்பு சக்திகளின் சங்கமத்தைக் குறிக்கிறது.
தற்காலிகமாக Project A22 x A6 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சர்வதேசத்தர AI, CG என பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இந்த திட்டம் தொடங்க உள்ளது, நடிகர்கள், குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025