72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு: எப்போது, எங்கு நேரலையில் பார்ப்பது?
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. 2024ஆம் ஆண்டு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்த விருதுகளுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளன. திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த விருது அறிவிப்பை எப்போது, எங்கு நேரலையில் பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் இதோ:
விவரங்கள்
எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது?
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த விருதுகள் அறிவிப்பை இன்று மாலை தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யவுள்ளது. அதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கம் மற்றும் YouTube சேனலில் காணலாம். பிரபல திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழு இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது.
பரிந்துரைப்பு
விருதுக்கான ரேஸில் இருக்கும் முக்கியத் திரைப்படங்கள்
இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் விருதுக்கான போட்டியில் உள்ளன. தமிழ்: மகாராஜா, மெய்யழகன், அமரன் மலையாளம்: பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், கிஷ்கிந்தா காண்டம், ஆடுஜீவிதம் இந்தி: ஆர்டிகிள் 370, ஸ்ரீகாந்த், சந்து சாம்பியன் தெலுங்கு: கல்கி 2898 AD, லக்கி பாஸ்கர், தேவரா: பார்ட் 1 சிறந்த நடிகருக்கான விருதை யார் வெல்வார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, 'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டி, 'தி கோட் லைஃப்' படத்திற்காக பிரித்விராஜ், 'அமரன்' படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி, 'மகாராஜா' படத்திற்காக விஜய் சேதுபதி ஆகியோர் ரேசில் முன்னணியில் இருப்பதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 'கல்கி' படத்தின் பிரம்மாண்ட VFX தொழில்நுட்பத்திற்கும் விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.