தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த திரைப்படமாக மலையாளத்தின் 'ஆட்டம்' தேர்வு
செய்தி முன்னோட்டம்
புது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மலையாள மொழியில் வெளியான ஆட்டம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நிலையில், சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனராக சூரஜ் பர்ஜாத்யா, சிறந்த துணை நடிகையாக நீனா குப்தா, சிறந்த துணை நடிகராக பவன் மல்ஹோத்ரா, பொழுதுபோக்கிற்கான சிறந்த திரைப்படமாக காந்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த அறிமுகமாக ஃபௌஜா மற்றும் பிரமோத் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதுகள்
மொழிவாரியாக சிறந்த படங்களின் பட்டியல்
தெலுங்கு - கார்த்திகேயா 2
தமிழ் - பொன்னியின் செல்வன் 1
பஞ்சாபி - பாகி டி டீ
ஒடியா - தமன்
மலையாளம் - சௌதி வெலக்கா சிசி.225/2009
மராத்தி - வால்வி
கன்னடம் - KGF: அத்தியாயம் 2
இந்தி - குல்மோஹர்
இவை தவிர பின்வரும் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு குறிப்புகள் - குல்மோகரில் மனோஜ் பாஜ்பாய், மற்றும் கலிகானுக்காக சஞ்சாய் சலில் சௌத்ரி
அதிரடி இயக்கம் - KGF: அத்தியாயம் 2
நடன அமைப்பு - திருச்சிற்றம்பலம்
பாடல் வரிகள் - ஃபௌஜா
இசையமைப்பாளர் - ப்ரீதம் (பாடல்கள்), ஏஆர் ரஹ்மான் (பின்னணி இசை)
பொன்னியின் செல்வன்
இதர விருதுகள்
படத்தின் ஒப்பனை உள்ளிட்ட இதர பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகள் பின்வருமாறு:-
ஒப்பனை - அபராஜிதோ
ஆடைகள் - கட்ச் எக்ஸ்பிரஸ்
தயாரிப்பு வடிவமைப்பு - அபராஜிதோ
எடிட்டிங் - ஆட்டம்
ஒலி வடிவமைப்பு - பொன்னியின் செல்வன் 1
திரைக்கதை - ஆட்டம்
வசனங்கள் - குல்மோகர்
ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் 1
கொரோனா தொற்றுநோய் காரணமாக தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாக்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1954இல் நிறுவப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தால் மேற்பார்வையிடப்படுகின்றன.