NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்

    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் திரைப்படத்திற்காக நடிகர் வடிவேலு பெற்றார்.

    இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் வருடா வருடம் நடைபெறும், சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதன் இறுதி விழா, ராயபேட்டை பி.வி.ஆா் சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    சிறந்த தமிழ் படத்திற்கான விருது இயக்குனர் மந்திர மூர்த்தியின் அயோத்தி திரைப்படத்திற்கும், இரண்டாவது சிறந்த தமிழ் படத்திற்கான விருதை கார்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன்பால் திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டது.

    வெற்றிமாறனின் விடுதலை 1 திரைப்படம், சிறந்த தமிழ் படத்திற்கான சிறப்பு விருதைப் பெற்றது.

    2nd card

    விருது வென்ற செம்பி, போர் தொழில் திரைப்படங்கள்

    சிறந்த நடிகை, நடிகர்களுக்கான விருதில், மாமன்னன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை அயோத்தி திரைப்படத்திற்காக பிரீத்தி அஸ்ரானிக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை, பிரபு சாலமன் இயக்கிய செம்பி திரைப்படத்திற்காக, குழந்தை நட்சத்திரம் நிலா பெற்றார்.

    போர் தொழில் திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் விருது வென்ற திரைப்படங்கள் உட்பட, மொத்தம் பத்து தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    மேலும், 57 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 126 திரைப்படங்கள் இந்த விழாவில் பங்கேற்றன.

    முதல் முறையாக, உலக சினிமா பிரிவில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட தயாரிப்பாளர் யுகி சேது தலைமையிலான நடுவர் குழு, விருதுகளுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வடிவேலு
    சென்னை
    இயக்குனர்
    தயாரிப்பாளர்

    சமீபத்திய

    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி
    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி

    வடிவேலு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி தமிழ் திரைப்படம்
    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வைரலான ட்வீட்
    வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள் தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் நடிகர் அஜித்

    சென்னை

    கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது செங்கல்பட்டு
    சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்  மழை
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை மு.க ஸ்டாலின்

    இயக்குனர்

    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர்
    உருவாகும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்- இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட் ஜெயம் ரவி
    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் தூத்துக்குடி

    தயாரிப்பாளர்

    சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை கோலிவுட்
    நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு  நடிகர் அஜித்
    பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு கோலிவுட்
    அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025