
பேடிஎம்மின் திரைப்பட டிக்கெட் பிஸ்னஸை சோமாட்டோ வாங்க உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பேடிஎம்மின் திரைப்பட டிக்கெட் பிஸ்னஸை வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ தெரிவித்துள்ளது.
பேடிஎம்மின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன் மற்றும் சோமாட்டோ இடையே ரூ.1,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்படி ஒரு பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சோமாட்டோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"ஒப்பந்தத்திற்காக பேடிஎம் உடன் நாங்கள் விவாதித்து வருகிறோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இந்த கட்டத்தில் வாரியத்தின் ஒப்புதல் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி இணங்கலுக்கு உத்தரவாதம் அளிக்கும் எந்த ஒரு பிணைப்பு முடிவும் எடுக்கப்படவில்லை." என்று சோமாட்டோ கூறியுள்ளது.
பேடிஎம்
சோமாட்டோவின் இரண்டாவது பெரிய கொள்முதல்
"வெளியே செல்லும் வணிகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விவாதம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் எங்களது நான்கு முக்கிய வணிகங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இது உள்ளது." என்று சோமாட்டோ மேலும் கூறியுள்ளது.
இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டால், சோமாட்டோவின் இரண்டாவது பெரிய கொள்முதலாக இது இருக்கும்.
2021ஆம் ஆண்டில் விரைவு வர்த்தக தளமான பிளிங்கிட்டை 4,447 கோடி ரூபாய் மதிப்பில் சோமாட்டோ வாங்கியது. அதுவே சோமாட்டோவின் முதல் பெரிய கொள்முதல் ஆகும்.
ஆனால் இது குறித்த எந்த தகவலையும் பேடிஎம் நிறுவனம் வெளியிடவில்லை.