அதிகரிக்கும் வாட்ஸ்அப் பங்குச் சந்தை மோசடி; அதைத் தவிர்ப்பது எப்படி?
மும்பையைச் சேர்ந்த 71 வயது நிதி நிபுணர் ஒருவர் பங்குச் சந்தை மோசடியில் சுமார் ரூ.2 கோடியை இழந்துள்ளார். வாட்ஸ்அப் செயலியில் வந்த மின்னஞ்சலால் அவர் பாதிக்கப்பட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, ஒரு பெண் இந்த நபருக்கு வாட்ஸ்அப்பில் அழைப்பு விடுத்து, பங்குச் சந்தையில் சம்பாதிக்க ஒரு பெரிய வாய்ப்பைப் பற்றி கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் உண்மையான செயலியைப் போன்ற தோற்றம் தரும் ஒரு மோசடி செயலியைப் பதிவிறக்க கூறியுள்ளார்கள் டிப்ஸ் அடிப்படையிலான முதலீடுகள் மூலம் தினசரி பெரும் தொகையை சம்பாதிப்பதாக அந்த குரூப்பில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மாதம் இந்தக் குழுவைப் பின்தொடர்ந்த பிறகு, அந்த அப்பாவி நபரும் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.
பேராசையால் மக்கள் ஏமாந்து வருகின்றனர்
அந்த நபர், தனது கணக்கில் சில இலாபங்களை மாற்ற முயன்றபோது மோசடி நடந்ததை கண்டறிந்துள்ளார். ரீஃபண்டபிள் வரிக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது அவரிடம் கூறப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இவரை போலவே பலரையும் குறி வைத்து, மோசடி செய்பவர்கள் பெரும் தரகு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக காட்டி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பங்குச் சந்தைகளில், குறிப்பாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் பெரும் வருமானத்தைப் பார்த்து, பெரும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பிற்கு ஆசைப்பட்டு பலர் பணத்தை இழந்துள்ளனர்.
கோடக் செக்யூரிட்டீஸ் வாடிக்கையாளர்களை எச்சரித்தது
இதுபோன்ற வழக்குகள் அதிகரித்துள்ளதால் இது குறித்து முதலீட்டாளர்களை கோடக் செக்யூரிட்டீஸ் எச்சரித்துள்ளது. கோடக் செய்தித் தொடர்பாளர் என்று யாரேனும் கூறினால், அவர்களை நம்புவதற்கு முன் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என அது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தரகு நிறுவனம் ஜூன் 20 அன்று ஊடக அறிக்கையை வெளியிட்டது. "இந்திய மற்றும் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி மோசடிகள் செய்யப்படுகின்றன. சமூக ஊடக தளங்களும் மோசடிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் தங்களை புகழ்பெற்ற நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாகக் காட்டுகின்றன" என்று அது கூறியது.
தொலைபேசி அழைப்புகளில் முதலீடுகளைப் பற்றி அதிகம் பேச வேண்டாம்
மும்பை நபர் பலிகடா ஆக்குவதற்காக மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். தொலைபேசி உரையாடல் காரணமாக மோசடி செய்பவரை முதலீட்டு நிபுணர் என்று நம்பி, மேலும் விசாரணையின்றி ரூ.2 கோடியை வேறொருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார். எனவே, யாராவது உங்களுக்கு தொலைபேசியில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கினால் அல்லது ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யச் சொன்னால், அவரை நம்ப வேண்டாம்.
வாட்ஸ்அப் குழுக்களில் கவனமாக இருங்கள்
முன்பின் தெரியாத ஒருவர் உங்களிடம் அனுமதி பெறாமல், உங்களை தனது வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். அந்த குழுவில் குறிப்பிட்ட குழுமப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான இலட்சியங்கள் போன்ற செய்திகள் வரக்கூடும். இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அந்த குரூப்பிலிருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாத எந்த செயலியையும் பதிவிறக்க வேண்டாம். ட்ராக் ரெக்கார்டு உள்ள நிதி ஆப்ஸை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் மொபைலில் வங்கிகள், MMC அல்லது ஏதேனும் தரகு நிறுவனங்களின் பயன்பாடுகள் உங்களிடம் இருக்கலாம். அவற்றைத் தவிர வேறு எந்தப் புதிய செயலிகளையும் டவுன்லோட் செய்யாமல் இருப்பது நல்லது.