கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இணைய செக் இன்(Web check-in) குறித்த பயணிகளின் தொடர்பு புகார்களை அடுத்து, அது கட்டாயம் இல்லை என இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம் இணைய செக் இன் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத விமான அனுபவத்தை தருவதால், அதை மேற்கொள்ள இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இலவச கட்டாய இணைய செக்-இன் இருந்தபோதிலும், ஒவ்வொரு இருக்கைக்கும் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் காட்டும் விமான நிறுவனங்கள் குறித்து மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்தன.
இதனை ஒட்டியே, இண்டிகோ நிறுவனம் இத்தகைய விளக்கத்தை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், வரும் நவம்பர் 8 ஆம் தேதி, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் பயண இணையதளங்களின் மூத்த அதிகாரிகளுடன் குறை தீர்ப்பு முகாமிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சர்ச்சை குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம்
#6ETravelAdvisory: Web check-in is not a mandatory requirement, however, for a hassle-free flight experience, we recommend our customers to web check-in in advance. Web check-in allows customers to have a smooth experience at the airport. #goIndiGo
— IndiGo (@IndiGo6E) October 28, 2023
3rd card
இணைய செக் இன் என்றால் என்ன?
விமான நிலையங்களில் உள்ள செக் இன் கவுண்டர்களில், உள்நாட்டு விமானங்களுக்கு 60 நிமிடத்திற்கு முன்னும், வெளிநாட்டு விமானங்களுக்கு 75 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே செக் இன் நடைமுறை தொடங்கும்.
பயணிகள் செக்கிங் கவுண்டருக்கு சென்று, அங்கு செக் இன் செய்து விட்டு போர்டிங் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இணைய செக் இன் மூலம், விமான நிலையம் செல்லாமலேயே உங்களால், 48 மணி நேரத்திற்கு முன்பே செக் இன் செய்து கொள்ளமுடியும். மேலும் இணையம் வழியாகவே போர்டிங் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
இணையச் செக் இன் செய்யும்போது, நம்முடைய இருக்கையை நாமே தேர்வு செய்து கொள்ள முடியும்.
இணைய செக் இன் நேரத்தையும் குறைத்து பயணத்தை எளிதாக்குகிறது.