
ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபட்டின் பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவனம், தன்னிடமிருந்த இந்தியாவேச் சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனின் அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவமானது, தங்களுடைய BH இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக, 2018ம் ஆண்டு பேடிஎம்மின் பங்குகளை வாங்கியது.
ஒரு பங்குக்கு ரூ.1,279.7 என்ற சராசரி விலையில், ஒன்97 கம்யூனிகேஷன் (பேடிஎம்மின் தாய் நிறுவனம்) நிறுவனத்தின் 2.6% பங்குகளை, அதாவது 17.02 மில்லியன் பங்குகளை ரூ.2,200 கோடி முதலீட்டில் வாங்கியது. இதுதான் BH இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்ட முதல் முதலீடாகும்.
முதலீடு
சரிவில் ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனப் பங்குகள்:
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,950 என்ற சரிவு விலையிலேயே இந்தியப் பங்குச்சந்தைகள் பட்டியலிடப்பட்டன ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனப் பங்குகள்.
அதனைத் தொடர்ந்தும் கடந்த இறண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள். அவ்வப்போது ஏறுமுகத்தை சந்தித்தாலும் பெரிய அளவில் மாற்றமில்லை.
அந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்த பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும், தங்களிடமிருந்த பங்குகளை விற்று வந்த நிலையில், தற்போது வாரன் பஃபட்டின் நிறுவனமும் அனைத்து பங்குகளையும் ரூ.1,370 கோடிக்கு விற்றுவிட்டு மொத்தமாக வெளியேறியிருக்கிறது.
ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனப் பங்கின் மீது செய்த முதலீட்டின் மூலமாக ரூ.800 கோடி அளவிற்கு நஷ்டத்தையும் சந்தித்திருக்கிறது பெர்க்ஷைர் ஹேத்தவே.