Page Loader
மிக்ஜாம் புயல் நிவாரணம்: உதவிக்கரம் நீட்டியுள்ள TVS நிறுவனம்
3 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடத்தில் வழங்கிய டிவிஎஸ் நிறுவன தலைவர்

மிக்ஜாம் புயல் நிவாரணம்: உதவிக்கரம் நீட்டியுள்ள TVS நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 08, 2023
01:38 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் சென்னை மக்களின் வாழ்க்கை இன்னும் சீரகவில்லை. தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பலரின் வாகனங்கள் பழுதடைந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கும், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள் பலரும் முன்வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த மிகப்பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமான TVS நிறுவனம், தன்னுடைய பங்கிற்கு மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொது நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், 3 கோடி ரூபாய் அளித்துள்ளார். அதேபோல, 18 ஆம் தேதி வரை, புயலால் பழுதான வாகனங்களுக்கு, முன்னுரிமை அளித்து, கூலி இன்றி பழுது பார்த்து தரப்படும் என்றும் TVS நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

உதவிக்கரம் நீட்டியுள்ள TVS நிறுவனம்

ட்விட்டர் அஞ்சல்

 3 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடத்தில் வழங்கிய டிவிஎஸ் நிறுவன தலைவர்