
மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை உயர்வு; இன்றைய (ஜூன் 19) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 19) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 உயர்ந்து ₹9,265 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹120 உயர்ந்து ₹74,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹17 உயர்ந்து ₹10,108 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹136 உயர்ந்து, ₹80,864 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்வு
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 அதிகரித்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,615 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹80 அதிகரித்து ₹61,000 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ₹1 உயர்ந்து ஒரு கிராமுக்கு ₹122 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,22,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.