Loading...
செப்டம்பர் 2026 நிதி மாற்றங்கள்: வருமான வரி தாக்கல் முதல் LPG e-KYC வரை முக்கிய தேதிகள்
செப்டம்பர் 2026 நிதி மாற்றங்கள்

செப்டம்பர் 2026 நிதி மாற்றங்கள்: வருமான வரி தாக்கல் முதல் LPG e-KYC வரை முக்கிய தேதிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
02:58 pm

செய்தி முன்னோட்டம்

ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், நாட்டின் நிதி சார்ந்த பல்வேறு முக்கிய நடைமுறைகளுக்கான கெடு தேதிகள் இன்றோடு முடிகின்றன. அதேவேளையில், வரும் செப்டம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம், சர்வதேசப் பயண விதிகளில் தளர்வு மற்றும் சாவரின் கோல்ட் பாண்ட் (SGB) மீட்டெடுப்பு என பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. பொதுமக்கள் தங்கள் நிதி சார்ந்த திட்டமிடலை சரியாக மேற்கொள்ள இந்த முக்கிய தேதிகளை நினைவில் கொள்வது அவசியமாகும்.

ஐடிஆர்

வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) செய்ய இன்று கடைசி நாள்

கணக்குத் தணிக்கை செய்யத் தேவையில்லாத, தொழில் அல்லது சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோர் 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தாக்கலை (ஐடிஆர்) செய்ய இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.

அதேசமயம், கணக்குத் தணிக்கைக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அக்.31 வரை கால அவகாசம் உள்ளது.

தாமத அபராதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உரிய படிவங்களைத் தேர்ந்தெடுத்து வரி செலுத்துவோர் இன்றைக்குள் தங்களது ஐடிஆரை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எல்பிஜி சிலிண்டர்

சமையல் எரிவாயு (எல்பிஜி) வாடிக்கையாளர்களுக்கு e-KYC கெடு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய இன்று இறுதி நாளாகும்.

எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த சரிபார்ப்பை முடிக்க வலியுறுத்தி வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் மையத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது இணையவழி டிஜிட்டல் தளங்கள் மூலமாகவோ இந்த சரிபார்ப்பை உடனடியாக முடிப்பதன் மூலம் எரிவாயு விநியோகத் தடங்கலைத் தவிர்க்கலாம்.

ADVERTISEMENT

விமானப் பயணம்

சர்வதேச விமானப் பயணிகளுக்கான புதிய டிஜிட்டல் முறை

வரும் செப்டம்பர் 1 முதல் இந்தியாவிலிருந்து சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் போர்டிங் பாஸ்களில் குடிவரவு முத்திரையிடும் முறை கைவிடப்படுகிறது.

டிஜிட்டல் முறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், பயணிகள் தங்களது மொபைல் போனில் உள்ள மின்னணு போர்டிங் பாஸ் அல்லது அச்சிடப்பட்ட நகலை காண்பித்தாலே போதுமானது.

இருப்பினும், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை கையில் வைத்திருப்பது அவசியமாகும்.

பாதுகாப்புச் சோதனைகள் வழக்கம் போல் தொடரும்.

ADVERTISEMENT

சாவரின் கோல்ட் பாண்ட்

சாவரின் கோல்ட் பாண்ட் (SGB) பணத்தை மீட்டெடுக்கும் காலம்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட தொடர்களில் சாவரின் கோல்ட் பாண்டுகளில் (SGB) முதலீடு செய்தவர்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் தங்களின் பத்திரங்களை முன்கூட்டியே மீட்டுப் பணமாக மாற்றுவதற்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பல்வேறு தொடர்களுக்கான மீட்டெடுப்பு சாளரம் செப்டம்பர் 14 முதல் திறக்கப்படவுள்ளது.

மேலும், செப்டம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு விலைகளில் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT