Loading...
3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து

3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
05:03 pm

செய்தி முன்னோட்டம்

வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பணப் பரிவர்த்தனைகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், செப்டம்பர் 28 முதல் 30 வரையிலான இந்த 3 நாட்களில் எஸ்பிஐ ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

டிஜிட்டல் சேவைகள்

வேலைநிறுத்தத்திலும் எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் இயங்கும்

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எஸ்பிஐ வங்கியின் அனைத்துக் கிளைகளும் வழக்கம்போலத் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யோனோ, இணையவழி வங்கி சேவை, வாட்ஸ்அப் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற அனைத்து டிஜிட்டல் தளங்களும் தடங்கலின்றி 24 மணி நேரமும் இயங்கும்.

வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றத்திற்கு யுபிஐ, நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பணி

ஞாயிற்றுக்கிழமை பணிபுரியும் அரசாங்க உத்தரவும் ஊழியர்களின் எதிர்ப்பும்

செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாக அறிவித்து, பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிக் கிளைகளைத் திறந்து வைக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

அரசின் இந்தத் திடீர் உத்தரவுக்கு பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஈடுசெய்யும் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரி ஒன்றிய நிதியமைச்சக செயலாளரை சந்தித்து அவர்கள் மனு அளித்துள்ளனர்.

இக்கோரிக்கை நேர்மறையாக பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முக்கிய பணிகள்

முக்கியமான வங்கிப் பணிகளை முன்கூட்டியே முடிக்க எஸ்பிஐ அறிவுறுத்தல்

வேலைநிறுத்தக் காலத்தில் பொதுமக்கள் நேரடியாக வங்கிக் கிளைகளுக்கு வருவதைத் தவிர்த்து, ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர பணத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் நேரில் சென்று மட்டுமே செய்ய வேண்டிய முக்கிய வங்கிக் கிளை பணிகளை வேலைநிறுத்தத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கட்டண ரத்து அறிவிப்பு, இந்த 3 நாள் வேலைநிறுத்தக் காலத்தில் மக்களுக்கு பெரும் நிம்மதியையும் நிதி சார்ந்த ஆறுதலையும் அளித்துள்ளது.

ADVERTISEMENT