NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் 86வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் 86வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
    இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் RIL முன்னணி அந்தஸ்தைத் தக்கவைக்கிறது

    ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் 86வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 06, 2024
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RILs) பார்ச்சூனின் 2024ஆம் ஆண்டிற்கான குளோபல் 500 பட்டியலில் 86 வது இடத்தை பெற்று, கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

    இந்த முன்னேற்றம் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் RIL இன் முன்னணி அந்தஸ்தைத் தக்கவைக்கிறது.

    நிறுவனத்தின் புதிய தரவரிசையானது அதன் முந்தைய 88வது இடத்திலிருந்து கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது மற்றும் 2021இல் அதன் 155 வது தரவரிசையில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 69 இடங்களின் பெரும் ஏற்றத்தை விளக்குகிறது.

    சாதனை

    ஆர்ஐஎல் 'பார்ச்சூன்' குளோபல் 500இல் உயர்ந்த தரவரிசையை அடைந்துள்ளது

    ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதுவரை அடையாத மிக உயர்ந்த தரவரிசையை 86வது இடம் குறிக்கிறது.

    மார்ச் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன் முடிவடையும் அந்தந்த நிதியாண்டுகளுக்கான மொத்த வருவாயின் அடிப்படையில் நிறுவனங்களை இந்தப் பட்டியல் வரிசைப்படுத்துகிறது.

    RIL இந்த மதிப்புமிக்க பட்டியலில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சாதனை படைத்துள்ளது.

    இது இந்தியாவில் உள்ள வேறு எந்த தனியார் துறை நிறுவனமும் செய்யாத சாதனையாகும்.

    RIL ஐ விட (30 ஆண்டுகள்) அரசு நடத்தும் LIC மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    நிதிநிலை செயல்பாடு

    2024 நிதியாண்டிற்கான சாதனை வருவாய்களை RIL தெரிவிக்கிறது

    2024-ஆம் நிதியாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை-உயர்ந்த ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது.

    இது ஆண்டுக்கு ஆண்டு 2.6% அதிகரிப்பைக் குறிக்கிறது.

    நிறுவனத்தின் EBITDA ஆனது 16.1% ஆண்டு அதிகரித்து ₹1.78 லட்சம் கோடியாக உள்ளது.

    RIL இன் O2C, எண்ணெய் மற்றும் எரிவாயு, சில்லறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் வணிகங்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தன.

    ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட தரவரிசையில் இந்த வலுவான நிதி செயல்திறன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

    மற்ற கம்பெனிகள்

    பட்டியலில் வால்மார்ட் முதலிடத்தில் உள்ளது

    Fortune-இன் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் Scott DeCarlo,"குளோபல் 500 என்பது வணிக வெற்றிக்கான இறுதி ஸ்கோர்கார்டு. 2023 இல் பார்ச்சூன் குளோபல் 500 இன் மொத்த வருவாய் $41 டிரில்லியனை எட்டியது. இது ஒரு சாதனை அளவாகும்" என்றார்.

    வால்மார்ட், அமேசான் மற்றும் சீனாவின் ஸ்டேட் கிரிட் ஆகியவை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

    இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, எல்ஐசி (95), இந்தியன் ஆயில் (116), எஸ்பிஐ (178), ஓஎன்ஜிசி (180), பாரத் பெட்ரோலியம் (258), டாடா மோட்டார்ஸ் (271), ஹெச்டிஎஃப்சி வங்கி (306), மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (463) மதிப்புமிக்க பட்டியலில் இடம் பிடித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025