Loading...
என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்குவது இனி ரொம்ப ஈஸி! அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல்
என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்குவதற்கான புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்

என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்குவது இனி ரொம்ப ஈஸி! அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
08:52 pm

செய்தி முன்னோட்டம்

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (என்ஆர்ஐ) இருந்து வீடோ அல்லது நிலமோ வாங்குவது என்பது வழக்கமான சொத்துப் பரிவர்த்தனையை விட அதிக ஆவணப் பணிகளையும், கூடுதல் சட்ட நடைமுறைகளையும் கொண்டதாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய குடிமக்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள் (HUF) என்ஆர்ஐகளிடம் இருந்து அசையா சொத்துக்களை வாங்குவதை எளிதாக்கும் வகையில், வருமான வரித்துறை மூலம் புதிய வரி பிடித்தம் (TDS) நடைமுறை அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

டான் எண் கட்டாயமில்லை

டான் எண் எடுக்கும் கட்டாயம் ரத்து

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு இந்தியர் என்ஆர்ஐயிடம் சொத்து வாங்கும் போது, அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் மூலத்தில் பிடிக்கும் வரித் தொகையை (TDS) அரசுக்கு செலுத்த டான் (TAN) என்ற தனி வரி எண்ணைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

ஒருமுறை மட்டுமே நடக்கும் சொத்துப் பரிவர்த்தனைக்காக பொதுமக்கள் டான் எண் எடுத்து சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அக்டோபர் 1 முதல் டான் எண் பெற வேண்டிய அவசியமில்லை என வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

பான் கார்டு

பான் கார்டு மூலம் எளிமையாக வரி செலுத்தும் முறை

புதிய விதிகளின்படி, சொத்து வாங்குபவர்கள் தங்களது வழக்கமான பான் கார்டு (PAN) பயன்படுத்தியே டிடிஎஸ் (TDS) தொகையைப் பிடித்து அரசுக்கு செலுத்த முடியும்.

பான் கார்டு அடிப்படையிலான சலான் வடிவிலான அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக இந்த வரிப் பரிவர்த்தனையை முடித்துக் கொள்ளலாம்.

புதிய வருமான வரிச் சட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், சொத்து வாங்குவோரின் கூடுதல் நிர்வாக சுமையை கணிசமாகக் குறைக்கும்.

ADVERTISEMENT

டிடிஎஸ்

டிடிஎஸ் விதிமுறைகள் தொடர்ந்து நீடிக்கும்

இருப்பினும், என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்கும் போது விதிக்கப்படும் மூலத்தில் பிடிக்கும் வரி (TDS) ரத்து செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வரியைக் கழித்துச் செலுத்த வேண்டிய பொறுப்பு வாங்குபவருக்குத் தொடர்ந்து இருக்கும்.

ஆனால் அதை செலுத்துவதற்கான நடைமுறை மட்டுமே எளிதாக்கப்பட்டுள்ளது.

எனவே, அக்டோபர் 1 முதல் என்ஆர்ஐகளுடனான சொத்து ஒப்பந்தங்களை எவ்வித சிக்கலுமின்றி எளிதாக முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT