NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ
    அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது ஓயோ

    அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமான ஓயோ, அதன் அமெரிக்க விரிவாக்க உத்தியில் குறிப்பிடத்தக்க நகர்வை அறிவித்துள்ளது.

    நிறுவனம் புகழ்பெற்ற அமெரிக்க பட்ஜெட் ஹோட்டல் சங்கிலிகளான மோட்டல் 6 மற்றும் ஸ்டுடியோ 6 ஆகியவற்றை வாங்க உள்ளது.

    பிளாக்ஸ்டோன் ரியல் எஸ்டேட்டில் இருந்து இந்த கையகப்படுத்தல் $525 மில்லியன் மதிப்புடையது. மேலும் இது ஒரு பண பரிவர்த்தனையாக இருக்கும்.

    இந்த ஒப்பந்தத்தில் மோட்டல் 6 மற்றும் ஸ்டுடியோ 6 பிராண்டுகளின் தாய் நிறுவனமான ஜி6 ஹாஸ்பிடாலிட்டியையும் ஓயோ வாங்க உள்ளது.

    நிலையான மூடல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் கையகப்படுத்தல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டல் 6 நெட்வொர்க்கில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் சுமார் 1,500 இடங்கள் உள்ளன.

    சந்தை ஊடுருவல்

    அமெரிக்காவில் வளர்ச்சிப் பாதை

    2019 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஓயோ அதன் சந்தை இருப்பை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    இந்நிறுவனம் தற்போது 35 மாநிலங்களில் 320 ஹோட்டல்களை நடத்துகிறது. 2023ஆம் ஆண்டில் மட்டும், ஓயோ அமெரிக்காவில் கிட்டத்தட்ட 100 ஹோட்டல்களை புதிதாக இணைத்துள்ளது.

    நிறுவனம் 2024ஆம் ஆண்டில் மேலும் 250 ஹோட்டல்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்க ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

    ஓயோ இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் ஸ்வரூப், இந்த கையகப்படுத்தல் நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத்திற்கான குறிப்பிடத்தக்க மைல்கல் என்று விவரித்துள்ளார்.

    இந்த மூலோபாய நடவடிக்கையின் முக்கிய காரணிகளாக மோட்டல் 6 இன் வலுவான பிராண்ட் அங்கீகாரம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நெட்வொர்க்கை அவர் எடுத்துரைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹோட்டல்
    இந்தியா
    அமெரிக்கா
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஹோட்டல்

    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் இந்தியா

    இந்தியா

    2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு இரு சக்கர வாகனம்
    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு ஆர்பிஐ
    ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனை மத்திய அரசு
    கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை கேரளா

    அமெரிக்கா

    விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு விபத்து
    டிரம்பின் அமைச்சரவையில் பணிபுரிய தயாராகும் எலான் மஸ்க்..ஆனால் இந்த அமைச்சரவை தான் வேண்டும் எலான் மஸ்க்
    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல் ஜெனரல் மோட்டார்ஸ்
    ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்; அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் கமலா ஹாரிஸ் கமலா ஹாரிஸ்

    வணிக புதுப்பிப்பு

    16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்! வணிக செய்தி
    தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்; வணிக செய்தி
    மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் வணிக செய்தி
    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025