
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 இந்தியர்களுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கூடாரங்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு சக்தியைக் காட்டிய முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புப் பபடையினரின் வீரத்தை மதித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பின்வரும் சலுகைகளை அறிவித்துள்ளன.
சலுகை
விமான டிக்கெட் சலுகைகள்
முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 100% பணம் திருப்பி அளிக்கப்படும்.
சலுகை செல்லுபடியாகும் தேதி: மே 31 வரை ஒருமுறை பயண நேரம் மாற்றம் செய்ய, ஜூன் 30 வரை எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது.
இச்சலுகைகள் இந்திய ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினருக்கே மட்டுமே செல்லுபடியாகும் எனவும், பயணிகள் தாங்கள் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டியிருக்கும் எனவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Air India group is grateful for the selfless service and dedication of our military and defence personnel. In the prevailing situation, for those personnel holding defence fares who are booked on Air India and Air India Express flights till 31 May 2025, we are offering full…
— Air India (@airindia) May 7, 2025