நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ
ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார். உணவை டெலிவரி செய்கையில், டெலிவரி பார்ட்னர்கள், ரெஸ்டாரன்ட் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்கள் வழங்கும் புகைப்படத்தை தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீபிந்தர் கோயல் பகிர்ந்த புகைப்படங்களில் ஒன்று, ராயல் என்ஃபீல்டு பைக்கில் அவர் டெலிவரி மேன் உடையுடன் செல்வதைக் காட்டுகிறது. ஐநா சபை ஜூலை 30ஆம் தேதியை உலக நண்பர்கள் தினமாக அனுசரித்தாலும், இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றன.