Loading...
மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டது தேசிய பங்குச் சந்தை (NSE): ரூ.4.45 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பிரம்மாண்ட நுழைவு
BSE சந்தையில் பட்டியலிடப்பட்டது NSE

மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டது தேசிய பங்குச் சந்தை (NSE): ரூ.4.45 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பிரம்மாண்ட நுழைவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2026
04:05 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் (NSE) பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் (BSE) அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன. என்.எஸ்.இ வெளியிட்ட தொடக்கப் பங்கு வெளியீட்டின் (IPO) இறுதி விலையான ரூ.1,785-லிருந்து, சுமார் 0.8% மட்டுமே உயர்ந்து ரூ.1,800 என்ற விலையில் மும்பை பங்கு சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன. நீண்டகால ஒழுங்குமுறை பயணத்திற்கு பிறகு, இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாவது பங்குச் சந்தை நிறுவனமாக NSE உருவெடுத்துள்ளது.

சந்தை மதிப்பு

ரூ.4.45 லட்சம் கோடி சந்தை மதிப்பு

மும்பை பங்கு சந்தையின் (BSE) தற்போதைய சந்தை மதிப்பான ரூ.1.33 லட்சம் கோடியை விடப் பல மடங்கு அதிகமாக, ரூ.4.45 லட்சம் கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்புடன் NSE தடம் பதித்துள்ளது.

இந்த ஐபிஓ மூலம் ரூ.22,562 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இது முழுவதுமாக ஆஃபர் ஃபார் சேல் முறையில் 12.64 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்த நிதி முழுவதும் பங்குகளை விற்ற முதலீட்டாளர்களுக்கே செல்லும்; என்.எஸ்.இ நிறுவனத்திற்குச் செல்லாது.

என்.எஸ்.இ ஐபிஓ பங்குகளின் விலை வரம்பு ரூ.1,700 முதல் ரூ.1,785 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கான குறைந்தபட்ச லாட் அளவு 8 பங்குகள் (ரூ.14,280) என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT