"வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில்
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின்(டிஜிஜிஐ) நோட்டீஸிற்கு வியாழக்கிழமை பதிலளித்துள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, விநியோ கட்டணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 74(1)ன் கீழ் வெளியிடப்பட்ட நோட்டீஸில், அந்நிறுவனத்திற்கு ₹401.70 கோடி வரி செலுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்தத் தொகை, அக்டோபர் 29, 2019 முதல் மார்ச் 31, 2022 வரையிலான காலகட்டத்தில், அபராதம் மற்றும் வட்டியை உள்ளடக்கியதாகும். ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குனரகத்தின் நோட்டீஸ், சோமாட்டோ நிறுவனம் உணவு விநியோகத்திற்கு, அவர்களது விநியோகஸ்த பார்ட்னர்கள், பொதுமக்களிடம் இருந்து வசூலித்தொகை குறித்து கேள்வி எழுப்பிள்ளது.
"விதிகளின்படி வரி செலுத்த வேண்டியதில்லை"
இந்த விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றம் குறித்து, ஜோமொடோ நிறுவனம் பங்குச் சந்தைக்கு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அதில், இந்த காரணங்களுக்காக வரிகட்ட வேண்டிய தேவையில்லை என்பதை அந்நிறுவனம் வலுவாக நம்புவதாக கூறியுள்ளது. அந்த நிறுவனத்தை பொருத்தவரையில், உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் சார்பில், சோமாட்டோ நிறுவனம் விநியோகத் தொகையை வசூலித்ததால், அந்நிறுவனம் வரி கட்ட தேவை இல்லை என வாதிடுகிறது. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, உணவு விநியோகிக்கும் நிறுவனங்களே மக்களுக்கு சேவைகளை வழங்குவதாகவும், சோமாட்டோ நிறுவனம் நேரடியாக சேவைகளை வழங்காததால் வரி கட்ட தேவையில்லை எனவும் கூறுகிறது. இது நிறுவனத்தின் சட்ட மற்றும் வரி ஆலோசகர்களால் அங்கீகரிக்கப்படுவதாகவும், நோட்டீஸிற்கு நிறுவனம் உரிய பதிலை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
சோமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் 3% சரிவு
பாம்பே பங்குச் சந்தையில் தனது விளக்கத்தை பதிவு செய்த சோமாட்டோ நிறுவனம், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவின் நோட்டீஸ்க்கு விரிவான விளக்கத்தை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வழக்கு, தனக்கு சாதமாக இருப்பதாக நம்பும் சோமாட்டோ நிறுவனம், வரியைப்பு குற்றத்திற்கு தான் உட்படுத்தப்பட்டது தவறு என நம்புவதாகவும் விவரித்துள்ளது. மேலும், இந்த தகவலை வெளியிட வேண்டும் என யாரும் நிர்பந்திக்கவில்லை என தெரிவித்துள் சோமாட்டோ, வரிக்கோரிக்கையின் தன்மை கருதி எச்சரிக்கையுடன் முன்னரே இதை வெளியிட்டதாக கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 3% சரிவை கண்டன. இருப்பினும், இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் 100% உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.