Loading...
டாடா குழுமத்தில் முக்கிய தலைமை மாற்றம்: 70 வயதை எட்டியதால் 6 நிறுவனப் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நோயல் டாடா
70 வயதை எட்டியதால் 6 டாடா நிறுவனப் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நோயல் டாடா

டாடா குழுமத்தில் முக்கிய தலைமை மாற்றம்: 70 வயதை எட்டியதால் 6 நிறுவனப் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நோயல் டாடா

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

டாடா குழுமத்தின் ஆளுமை விதிகளின்படி, 70 வயதை நிறைவு செய்ததை தொடர்ந்து நோயல் டாடா குழுமத்தின் 6 முக்கிய நிறுவனங்களின் இயக்குநர் குழு பதவிகளிலிருந்து இன்று ஓய்வு பெற்றுள்ளார். இதன் மூலம் 4 நிறுவனங்களின் தலைவர் மற்றும் 2 நிறுவனங்களின் துணைத் தலைவர் பதவிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். இருப்பினும், டாடா குழுமத்தின் தாய் அமைப்பான டாடா டிரஸ்ட்ஸ் தலைவராகவும், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும் அவர் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

நோயல் டாடா விலகிய 6 நிறுவனங்களும் புதிய வாரிசுகளும்

நோயல் டாடாவின் ஓய்வைத் தொடர்ந்து, டாடா குழும நிறுவனங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிரெண்ட்: வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோ போன்ற சில்லறை விற்பனை பிராண்டுகளை இயக்கும் டிரெண்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நோயல் டாடா விலகியுள்ளார். இப்பொறுப்பை சட்ட நிறுவனமான AZB & Partners இணை நிறுவனர் பஹ்ராம் வகீல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வோல்டாஸ்: வோல்டாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO சுனில் டிசோசா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 2027 மே மாதம் ஓய்வு பெறும் சி.பி. முகுந்தன் மேனனுக்கு பிறகு, ஜெயந்த் பாலன் அடுத்த நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கவுள்ளார்.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்: இந்நிறுவனத்தின் தலைவர் பதவியையும் பஹ்ராம் வகீல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

டைட்டன்

டைட்டன் முதல் டாடா இன்டர்நேஷனல் வரை

டாடா இன்டர்நேஷனல்: டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO டி.வி. நரேந்திரன், டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

டாடா ஸ்டீல்: டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நோயல் டாடா விலகியுள்ளார். இப்பதவிக்கான புதிய வாரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

டைட்டன் கம்பெனி: 2003-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்பிலிருந்த டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

எதிர்காலம்

ஓய்வின் பின்னணி & டாடா குழுமத்தில் இனி இவரது பங்கு என்ன?

டாடா குழுமத்தின் கொள்கைப்படி, செயல்பாடற்ற இயக்குநர்கள் 70 வயதில் ஓய்வு பெற வேண்டும்.

1956 நவம்பர் 12-இல் பிறந்த நோயல் டாடாவுக்கு இன்று 70 வயது நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே திட்டமிடப்பட்டபடி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக ரத்தன் டாடாவும் இதே விதியின் கீழ்தான் தனது பதவிகளிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு நிறுவனப் பதவிகளிலிருந்து விலகினாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66% பங்குகளைக் கொண்டுள்ள டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா தொடர்ந்து செயல்படுவார். இதன் மூலம் ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பில் அவரது ஆளுமை தொடரும்.

ADVERTISEMENT